லக்னோ,
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களோல் டெங்கு பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. மழைகாலம் தொடங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் டெங்கு பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் நேற்று 33 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,33 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.