தேசிய செய்திகள்

பாக்.காஷ்மீரிலிருந்து வர்த்தகம் செய்ய 34 நிறுவனங்களுக்கு தடை

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் வர்த்தகம் செய்ய 34 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்

இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ள இந்த எல்லைதாண்டிய வர்த்தகத்திற்கான காப்பாளர் சாகர் டி தோய்ஃபோடே , இந்த 34 நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இரு நாட்டு அதிகாரிகளும் சட்ட விரோத வர்த்தகத்தை தடுப்பதற்காக ஒருசேர முடிவெடுத்துள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

இருவாரங்களுக்கு முன்னர் காவல்துறையினர் 66.5 கிலோ கிராம் ஹெராயின் மற்று பிரவு சுகர் போதைப்பொருட்களை ஒரு டிரக் வண்டியிலிருந்து கைப்பற்றினர். அந்த வண்டி பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலிருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை