தேசிய செய்திகள்

ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலி: 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்

ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலியானதுடன், 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயவாடா,

ஆந்திர சட்டசபையில் அம்மாநில வேளாண்துறை மந்திரி கொரசாலா கண்ணபாபு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் 4 மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 34 பேர் இறந்துள்ளனர். இன்னும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 5 லட்சத்து 33 ஆயிரம் விவசாயிகள் பயிர் சேதத்தை சந்தித்துள்ளனர். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

பலியான கால்நடைகள் மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கும் இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு