புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஸ் சர்கார், நாடு முழுவதும் 34,734 கல்லூரிகள் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சிலிடம் தரச்சான்றிதழ் பெறவில்லை என்று தெரிவித்தார்.
இந்தியாவில் மொத்தம் 1,113 பல்கலைக்கழகங்கள் மற்றும் 43,796 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 418 பல்கலைக்கழகங்கள் மற்றும் 9,062 கல்லூரிகள் மட்டும் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சிலிடம் தரச்சான்றிதழ் பெற்றுள்ளதாக சுபாஸ் சர்கார் கூறியுள்ளார்.
கல்லூரிகளின் தரத்தை நிர்ணயம் செய்யும் பணியில் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த கவுன்சிலிடம் இருந்து தரச்சான்றிதழ் பெறுவது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. இதை ஊக்குவிக்க தரச்சான்றிதழ் பெறுவதற்கான கட்டணங்கள் சமீபத்தில் குறைக்கப்பட்டுள்ளன என்று சுபாஸ் சர்கார் தெரிவித்துள்ளார்.