தேசிய செய்திகள்

ஆந்திரா: இறந்துபோன பிச்சைக்காரர் வீட்டில் இருந்து ரூ 3.49 லட்சம் மீட்பு..!

காக்கிநாடா அருகே இறந்துபோன பிச்சைக்காரர் வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ஆந்திரா:

ஆந்திர மாநிலம் காக்கிநாடா, வேலங்கி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 75). இவர் அங்குள்ள சிறிய குடிசையில் தங்கி இருந்து கோவில்களில் பிச்சை எடுத்து வந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று இறந்தார். ராமகிருஷ்ணனுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அங்குள்ள போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது 2000, 500, 200, 100 ரூபாய் நோட்டுகளும் மற்றும் சில்லறை நாணயங்கள் இருந்தது. அவற்றை எண்ணி பார்த்த போது 3 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து முதியவரை தகனம் செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை சமூக அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்