கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 39,047 பேருக்கு தொற்று உறுதி

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கர்நாடகத்தில் இன்று புதிதாக 39,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 39 ஆயிரத்து 822 ஆக அதிகரித்து உள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 22,596 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 229 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தநிலையில், பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 036 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 11,833 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 10 லட்சத்து 95 ஆயிரத்து 883 பேர் குணம் அடைந்து உள்ளனர். தற்போது 3 லட்சத்து 28 ஆயிரத்து 884 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் அதில் 2,192 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்