பதேபூர்,
உத்தர பிரதேசத்தின் பதேபூர் நகரில், 2021ம் ஆண்டு அக்டோபர் 15ந்தேதி 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்த வழக்கு காகா கொத்வாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்திய போலீசார் ஒரு வாரத்தில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு சம்பவம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதன்படி, சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உள்ளது.