தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 4 தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற வெவ்வேறு கட்டத்தில் உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற வெவ்வேறு கட்டத்தில் உள்ளன. கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் டி.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதிக்காக தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் தடுப்பூசியும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் அடினோ இன்ட்ராசல் தடுப்பூசியும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கிறது. ஜெனோவோ பயோபார்மசியூடிகல்ஸ் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. குர்கானைச் சேர்ந்த ஜெனிக் லைப் சயின்சஸ் நிறுவனம் உருவாக்கி வருகிற தடுப்பூசி, பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளது.

இந்த தகவல்களை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று வெளியிட்டார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?