கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கட்டண சலுகையின்றி ரெயிலில் பயணம் செய்த 3.78 கோடி மூத்த குடிமக்கள்..!

2020 மார்ச் முதல் கட்டண சலுகையின்றி 3.78 கோடி மூத்த குடிமக்கள் ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரெயில்களில் 58 வயதான பெண்களுக்கும், 60 வயதான ஆண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதியில் இருந்து இந்த கட்டண சலுகை நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால், மூத்த குடிமக்களும் முழு கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டி உள்ளது.

இதுதொடர்பாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

அதில், கடந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதியில் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்வரை 3 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 668 மூத்த குடிமக்கள் ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் முழு கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர் என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து