தேசிய செய்திகள்

பீகாரில் குடிசைப்பகுதியில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு

பீகாரில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்தயாலு ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சில மணி போராடி தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 7 பேர் காயமடைந்தனர். தீக்காயங்களுக்கு உள்ளான 7 பேர் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்," என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு