குவாலியர்,
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகேயுள்ள தார்பான் காலணியில் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அங்குள்ள ஒரு வீட்டில் குளிர்சாதனப்பெட்டி அழுத்தம் காரணமாக திடீரென வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்
கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் என 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் சிக்கியவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளிவரவில்லை.