புதுச்சேரி,
புதுச்சேரியில் 3,366 பேரிடம் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 640 பேருக்கு தொற்று உறுதியானது. மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் 9,267 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று முன்தினம் 1,069 பேர் குணமடைந்தனர். 1,799 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொற்று பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 1,935 ஆக உயர்வடைந்து உள்ளது.