சோபியான் மாவட்டம் தரம்டோரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல்களை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணவும், அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காணவும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.