கலபுரகி:
கலபுரகி மாவட்டம் ஜீவர்கி தாலுகாவை சேர்ந்த சிலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர். அவர்கள் மொத்தம் 16 பேர் ஒரே சுற்றுலா வேனில் சென்றனர். சுற்றுலாவை முடித்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கவுனள்ளி கிராஸ் அருகே சுற்றுலா வேன் சென்றபோது, எதிரே கரும்பு ஏற்றி கொண்டு வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், இதில் பயணித்த 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவலின் பேரில் வந்த ஜிவர்கி போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகாவின் புறநகர் பகுதியில் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை செல்கிறது. அந்த நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் முடுகெரே அருகே சென்றபோது சரக்கு லாரி மீது மோதியது. இந்த மோதத்தில் சுற்றுலா வேனில் பயணித்த கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும், 5 டிரைவர் உள்பட பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.