தேசிய செய்திகள்

போலி என்கவுண்ட்டர் வழக்கு: முன்னாள் துணை மேயர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரபிரதேசத்தை சேர்ந்த கோபால் மிஸ்ரா என்ற ரவுடியை அலிகஞ்ச் போலீசார் கடந்த 1994–ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீசார், இது ஒரு போலி என்கவுண்ட்டர் என கண்டறிந்தனர்.

தினத்தந்தி

லக்னோ,

முன்னாள் துணை மேயர் அபய் சிங், வார்டு கவுன்சிலர் அசோக் மிஸ்ரா உள்ளிட்டோருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அசோக் மற்றும் கோபால் இடையே இருந்த ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் இந்த கொலை நடந்திருப்பதை உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து அபய் சிங், அசோக் மிஸ்ரா உள்பட 6 பேர் மீது லக்னோ கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வப்னா சிங், அபய் சிங், அசோக் மிஸ்ரா மற்றும் 2 போலீஸ்காரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரதோர், மற்றொரு போலீஸ்காரர் முன்ஷி லால் ஆகியோர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு