தேசிய செய்திகள்

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சல் செக்டாரில் உள்ள காலா வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸ் உதவியுடன் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தகவலை ஜம்மு- காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்