தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம்; இந்தியாவுக்கு எதிரான பதிவுகளை வெளியிட்ட 4 டுவிட்டர் கணக்குகள் தற்காலிக முடக்கம்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளை வெளியிட்ட 4 டுவிட்டர் கணக்குகள் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக தவறாக மற்றும் அடிப்படையற்ற பதிவுகளை வெளியிட்ட 4 டுவிட்டர் கணக்குகள் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்ற செயல்களில் ஈடுபட்ட வேறு 4 கணக்குகளும் முடக்கப்படும் என கூறப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்