குல்லு,
இமாசல பிரசேத்தின் குல்லு மாவட்டத்தில் கட்சா பள்ளத்தாக்கு பகுதியில் நீர்மின் திட்டமொன்றில் சுரங்க பாதைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதில், தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் சுரங்க பாதையின் கட்டுமானத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.