பாட்னா,
பீகார், ஜார்கண்ட், மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு புயல் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி பீகாரில் 18 பேரும் ஜார்க்கண்டில் 13 பேரும், உத்தர பிரதேசத்தில் 9 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் 3 பேர் பலியானதாகவும் மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால், அங்குள்ள பகுதிகளில் மின்விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.