தேசிய செய்திகள்

மராட்டியம்: தடை செய்யப்பட்ட 400 இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல்

மருத்துவமனை அருகே இளைஞர் சுற்றித்திருந்தார்.

தினத்தந்தி

மும்பை,

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 20 குழந்தைகள் கடந்த மாதம் உயிரிழந்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்கள் சில இருமல் மருந்துகளை தடை செய்துள்ளன.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கல்யான் பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தனியார் மருத்துவமனை அருகே  இளைஞர் சுற்றித்திருந்தார். அப்போது, அந்த நபரை பிடித்த போலீசார் பைக்கில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த நபரின் பெயர் முகமது அனிஸ் (வயது 33) என்பதும் அவர் தடைசெய்யப்பட்ட இருமல் மருந்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அனிசை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து தடைசெய்யப்பட்ட 400 இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அனிசுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்