கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்தது.

தினத்தந்தி

போர்ட் பிளேர்,

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 11.04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது டுவிட்டரில், ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற புள்ளிக் கணக்கில் (நேற்று)இரவு 11.04 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் ஏற்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு