புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று கொரோனா மாதிரி பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்புகளை கண்டறிவதும், சிகிச்சை அளிப்பதும் அவசியம் என்பதற்காக இந்த நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 42 கோடியே 70 லட்சத்து 16 ஆயிரத்து 605 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
நேற்று ஒரு நாளில் 17 லட்சத்து 90 ஆயிரத்து 708 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.