தேசிய செய்திகள்

சீக்கியர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பு

43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

கடந்த 1991-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுக்தியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47 போலீசாருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் இடைப்பட்ட காலத்தில் 3 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணையின் முடிவில், 43 போலீசாருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடுங்குற்றத்தை செய்ததால் ஒருவரை கொல்வது போலீசாரின் கடமை அல்ல என்றும், தவறு செய்தவர்களை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்