தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தற்போது யாரும் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை: உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் இன்றைய தேதியில் வீட்டுக்காவலில் யாரும் வைக்கப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 430 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது யாருமே வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவயில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள், கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் என 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

அவர்களில் இதுவரை 430 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர்கூட வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்