கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் வேகமெடுக்கும் கொரோனா: புதிதாக 44,388 பேருக்கு தொற்று..!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 44 ஆயிரத்து 388 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 69,20,044 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்ப்பு காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,41,639 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 15 ஆயிரத்து 351 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,72,432 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 02 ஆயிரத்து 259 பேர் தற்பொது சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,216 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை