தேசிய செய்திகள்

மலையேற்றம் சென்ற ஐஐடி மாணவர்கள் பத்திரமாக உள்ளனர்: இமாச்சல பிரதேச முதல் மந்திரி தகவல்

மலையேற்றம் சென்று சிக்கிய ஐஐடி மாணவர்கள் பத்திரமாக உள்ளதாக இமாச்சல பிரதேச முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் லாஹுல் மற்றும் ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிக்கு 50 பேர் கொண்ட குழு மலையேற்றம் மேற்கொண்டிருந்தது. இவர்களில் 30 பேர் ரூர்க்கியில் உள்ள ஐஐடியில் படித்து வந்த மாணவர்கள் ஆவர். இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மலையேற்றம் சென்ற அனைவரது தொடர்பும் திடீரென துண்டிக்கப்பட்டது.

இதனால், அவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்ட நிலையில், தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில்,30 -ஐஐடி மாணவர்கள் உட்பட மலையேற்றம் சென்ற அனைவரும் பத்திரமாக இருப்பதாக இமாச்சல பிரதேச முதல் மந்திரி ஜெய் ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...