தேசிய செய்திகள்

காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 45 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் நடப்பு ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 45 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சிர்ஹாமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி.பி. விஜய்குமார் இன்று கூறும்போது, படையினரின் என்கவுண்ட்டரில், லஷ்கர் இ தொய்பா இயக்க தளபதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். பதுங்கியுள்ள உள்ளூர் பயங்கரவாதியை தேடும் பணி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை காஷ்மீரில் 45 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட தளபதி நிசார் தார் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து