பாட்னா,
நாட்டின் வடபகுதிகளில் கனமழைக்கு பீகார், அசாம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 45 லட்சத்து 39 ஆயிரத்து 206 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
அவர்களில் பலர் தங்கள் வீடு, உடைமைகள் உள்ளிட்டவைகளை இழந்துள்ளனர். இதுவரை 26,732 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படை ஆகியவற்றை சேர்ந்த 30 குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.