ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அம்மாநிலத்தில் பதான் பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 5.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.