லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்குள்ள 12 மாவட்டங்களில் உள்ள அயோத்தி, அமேதி உள்ளிட்ட 61 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இன்று காலை 7 மணி முதல் 1 மணி வரையிலான நிலவரப்படி, 34.83% வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இப்போது பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.28 % வாக்குப்பதிவு நடந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி,
அமேதியில் 46.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அயோத்தியில் 50.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பஹ்ரைச்சில் 48.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பாரபங்கியில் 45.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சித்ரகூடில் 51.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கோண்டாவில் 46.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கவுசாம்பியில் 48.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிரதாப்கரில் 44.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிரயாக்ராஜில் 42.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ரேபரேலியில் 46.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஷ்ரவஸ்தியில் 49.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சுல்தான்பூரில் 46.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.