தேசிய செய்திகள்

பட்டதாரி-ஆசிரியர் தொகுதிகளுக்கு தேர்தல்: பசவராஜ் ஹொரட்டி உள்பட 49 வேட்பாளர்கள் போட்டி

பட்டதாரி- ஆசிரியர் தொகுதிகளுக்கான தேர்தலில் பசவராஜ் ஹொரட்டி உள்பட 49 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

49 வேட்பாளர்கள்

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் வடமேற்கு பட்டதாரி, தெற்கு பட்டதாரி தொகுதிகள், வடமேற்கு ஆசிரியர், மேற்கு ஆசிரியர் என மொத்தம் 4 தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. 26-ந் தேதி மனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 69 பேர் மனு தாக்கல் செய்தனர். 27-ந் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில் 14 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 55 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்த நிலையில் மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். இதில் 6 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. 4 தொகுதிகளிலும் பா.ஜனதாவை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி உள்பட மொத்தம் 49 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதில் பெண்கள் 4 பேர் இருக்கிறார்கள். பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 4 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. களத்தில் 33 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளனர்.

பிரசாரம் சூடுபிடிக்கும்

வருகிற 13-ந் தேதி ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் வாக்களிக்க உள்ளனர். இதில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இன்று முதல் தோதல் பிரசாரம் சூடுபிடிக்கும். ஆசிரியர்-பட்டதாரிகளின் வீடுகளுக்கு, வேட்பாளர்கள் நேரில் சென்று வாக்கு சேகரிக்க உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு