ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. அதிகாலை 5.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.