தேசிய செய்திகள்

நவி மும்பையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் காயம்

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் வியாழக்கிழமை இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

நவி மும்பையில் உள்ள பாம் பீச் சாலையில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு கார், மோசமாக சேதமடைந்தது. மேலும் மற்றொரு கார் அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்தது.

இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை