தேசிய செய்திகள்

ஒடிசாவில் சாலையோரம் 5 கிலோ வெடிகுண்டு; கண்டறிந்த பி.எஸ்.எப்.

ஒடிசாவில் சாலையோரம் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒடிசாவின் கோரபுத் மாவட்டத்தில் ராமகிரி பகுதியில் புஜாரிபுத் சவுக் என்ற இடத்திற்கருகே ராமகிரி குப்தேஷ்வர் சாலையில் சீரமைக்கப்பட்டு வந்த சாலையோரம் சக்தி வாய்ந்த வெடிகுண்டு

ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

இது 5 கிலோ எடை கொண்டிருந்துள்ளது. இந்த வெடிகுண்டு பற்றி உளவு அமைப்பு அளித்த தகவல் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த பகுதிக்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் குழு ஆகியவை சென்றன. இதில், அந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால், பெரிய அளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்