புதுடெல்லி,
மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, மத்திய அரசு மற்றும் அதன் அலுவலகங்களில் தற்போது உள்ள 5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் படிப்படியாக மின்சார கார்களாக மாற்றப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 83.20 கோடி லிட்டர் எரிபொருள் மிச்சமாகும். அந்த கார்கள் வெளியிடும் 22.3 கோடி டன் கார்பன்டை ஆக்சைடும் தவிர்க்கப்படும் என்றார்.