தேசிய செய்திகள்

ரவுடி கொலை வழக்கில் 5 பேர் பிடிபட்டனர்

பெங்களூரு டி.ஜே ஹள்ளியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

டி.ஜே.ஹள்ளி:-

பெங்களூரு டி.ஜே.ஹள்ளியை சேர்ந்தவர் கபில். பிரபல ரவுடி ஆவார். இவர் மீது மடிவாளா போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் விசாரணையில் உள்ளன. இவருக்கும், டி.ஜே.ஹள்ளியை சேர்ந்த நவீன், ராகுல் உள்ளிட்டோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ரவுடி கபில் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகே சென்றார். அப்போது அவரை நவீன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிமறித்தார். பின்னர் அவருடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை எடுத்து, கபிலை தாக்கினர். இதில் கபில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரவுடி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த நவீன், பவன், ராகுல், புனித் மற்றும் சங்கர் ஆகியோர் என்பதும், முன்விரோதம் காரணமாக அவர்கள் இந்த கொலையை செய்தது தெரிந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த கொலை கூலிப்படையை கொண்டு நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை