தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி 5 மாணவர்கள், ஆசிரியர் உயிரிழப்பு

ஆந்திர பிரதேசத்தில் ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

குண்டூர்

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள மாடிப்படு கிராமத்தில் வேத பாட சாலையைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஒரு ஆசிரியர் உள்பட ஆறு பேர் கிருஷ்ணா நதி வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

வேத பாடசாலையின் ஆசிரியருடன் 6 மாணவர்கள் அச்சம்பேட் மண்டலம் மடிபாடு கிராமம் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மாணவர்கள் கவனக்குறைவாக ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மாணவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவ சர்மா (14), நிதிஷ் குமார் தீட்சித் (15), ஹர்ஷித் சுக்லா (15), சுபம் திரிவேதி (17), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷுமன் சுக்லா (14) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆறாவது மாணவரும் இந்த துயர சம்பவத்தில் மூழ்கி இறந்தார், மேலும் அவரது உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மீனவர்களின் உதவியுடன் ஆசிரியர் மற்றும் 5 மாணவர்களின் சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன.

குண்டூர் மாவட்டம் நரசராவ்பேட்டையைச் சேர்ந்த கே.சுப்ரமணியம் (24) என்பவர் ஆசிரியர் ஆவார்.அட்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள மடிபாடு என்ற இடத்தில் உள்ள ஸ்வேதா சிருங்காசலம் வேதப் பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்கள் வேதக் கல்வி பயின்று வந்தனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வேதக் கல்விக்காக இங்கு வருகிறார்கள், அவர்கள் வழக்கமாக நதியில் நீராடுவது வழக்கம்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்