தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பூசல் பகுதியில் நள்ளிரவு முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில், காலையில் ஒரு பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர். இதனால் பயங்கரவாதிகளின் மொத்த பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து என்கவுண்ட்டர் நடத்தப்பட்டு வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி.பி. விஜய் குமார் கூறும்போது, காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். படையினருக்கு பாதிப்பு எதுவுமின்றி செயல்பட்டு என்கவுண்ட்டரில் ஈடுபட்ட போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், புல்வாமாவின் பூசல் பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை