தேசிய செய்திகள்

5 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்படவில்லை; அடுத்த ஆண்டு காலாவதியாகும் என தகவல்

தடுப்பூசிக்கான தேவை இல்லாததால், கோவாக்சின் உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது

தினத்தந்தி

ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்களிடம் ஆர்வம் இல்லை.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தில் 200 மில்லியனுக்கும்(20 கோடி) அதிகமான அளவு கோவாக்சின் தடுப்பூசி கைவசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கான தேவை இல்லாததால், கோவாக்சின் உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது சுமார் 50 மில்லியன்(5 கோடி) டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த சுமார் 10 கோடி டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி காலாவதியாகி விட்டதாக அந்நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது