தேசிய செய்திகள்

50% இடஒதுக்கீடு விவகாரம் : தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சில மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இதே விவகாரம் தொடர்பாக கேரளா மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவுடன் இந்த மனுவையும் இணைத்து விசாரிப்பதாக கூறி மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் (19 ஆம் தேதி) தள்ளிவைத்தது. மேலும், இந்த மேல் முறையீடு மனு தொடர்பாக விரிவான பதிலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்