தேசிய செய்திகள்

சிவராத்திரி விழாவில் உணவு சாப்பிட்ட 500 பேருக்கு ‘திடீர்’ உடல்நல குறைவு

சிவராத்திரி விழாவில் உணவு சாப்பிட்ட 500 பேருக்கு ‘திடீர்’ உடல்நல குறைவு ஏற்பட்டது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டம் ஹமித்பூர் பகுதியில் சுமார் 500 பேருக்கு நேற்று திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 70 பேர் வயிற்று வலி, வாந்தி போன்ற காரணங்களுக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். தகவல் அறிந்த அப்பகுதி எம்.எல்.ஏ.வும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் 4 கிராமங்களில் 2 மருத்துவ முகாம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழு சிகிச்சை அளித்தது.

சிபுடோலா என்ற பகுதியில் சிவராத்திரி விழாவின் கீர்தன் என்ற நிகழ்ச்சி நடந்தது. அப்போது உணவு பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்டவர்களுக்குத்தான் உடல்நல குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் அந்த பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் மாதிரியும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்