தேசிய செய்திகள்

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் 5,161 பேர் கைது - மத்திய அரசு தகவல்

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் 5,161 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இதுவரை முன்னெச்சரிக்கையாக 5 ஆயிரத்து 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கல் வீசுபவர்கள், பிரிவினைவாதிகள், கிளர்ச்சியாளர்கள், கட்சி தொண்டர்கள், பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் ஆகியோரும் அடங்குவர். இவர்களில் 609 பேர் இன்னும் காவலில் உள்ளனர். முன்னாள் முதல்-மந்திரிகள் 3 பேரும் இவர்களில் அடங்குவர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து போலீஸ் துப்பாக்கி சூட்டில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், பயங்கரவாத சம்பவங்களில், 3 போலீசாரும், 17 அப்பாவிகளும் பலியாகி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை