சண்டிகர்,
சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற ஜாகீர் ஹுசைன் ரேஜா பூங்காவில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் ரோஜா மலர்கள் திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில் 52-வது ரேஜா மலர்கள் திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி(இன்று) வரை 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பல விதமான ரோஜா மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மலர்களைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அங்கே விதவிதமாக பூத்துக்குலுங்கிய வண்ண மலர்களை உற்சாகமாக கண்டுகளித்தனர்.