கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை 53.31 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர். தகவல்

இந்தியாவில் இதுவரை 53.31 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 53,31,89,348 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த மாதம் 27-ந்தேதி, முதல்முறையாக நாடு முழுவதும் ஒரே நாளில் 1 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. 2-வது தடவையாக, கடந்த 31-ந்தேதி, 1 கோடியே 28 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இந்த சூழலில் 3-வது தடவையாக நேற்று 1 கோடி தடுப்பூசிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மாலை 6 மணி நிலவரப்படி, 90 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இவற்றில், உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 35 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து தடுப்பூசி போட்ட விவரங்கள் இன்று முழுமையாக வந்து சேரும். அப்போது, 1 கோடி தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டதா என்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு