தேசிய செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசும் வெப்ப அலை - 54 பேர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினத்தந்தி

டெல்லி,

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் உச்சமடைந்து வருகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வெப்ப அலை வீசி வருகிறது. டெல்லி உள்பட பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலை தாக்கத்தால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பீகாரில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை தொடர்ந்து வீசி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.    

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு