திருவனந்தபுரம்,
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தற்போது கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் இன்று புதிதாக 5,980 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 83 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், இன்று ஒரே நாளில் 5,745 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 847 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,920 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 64,346 பேர் சிகிச்சையில் உள்ளதாக அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.