புதுடெல்லி ,
இந்தியாவில் 5ஜி தொலைதொடர்பு சேவைகளுக்கான அலைக்கறைக்கான ஏலத்துக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி வரும் 26-ம் தேதி 5ஜி அலைக்கறைக்கான ஏலம் நடைபெறுகிறது.ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன.
இதில் ஜியோ முகேஷ் அம்பானியின் நிறுவனம். ஏர்டெல் சுனில் பார்தி மிட்டலின் நிறுவனமாகும். இதனிடையே நான்காவது விண்ணப்பதாரர் அதானி குழுமம் இந்த ஏலத்தில் பங்கேற்க இருப்பதால் 5ஜி ஏலத்திலும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான அதானி, அம்பானி இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.