தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: 6 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடியில் இணைந்தனர்

அகிலேஷ் யாதவ் முன்னிலையில் 6 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடியில் இணைந்தனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் நேற்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடியில் இணைந்தனர். இவர்கள் 6 பேரும் கடந்த ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளரை எதிர்த்ததால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இதைப்போல சீதாபூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ராகேஷ் ரத்தோரும் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், தன்னை சமாஜ்வாடியில் இணைத்துக்கொண்டார். இவரும் ஏற்கனவே கட்சித்தலைமையையும், பிரதமர் மோடியையும் விமர்சித்ததால் பா.ஜனதாவில் ஓரங்கட்டப்பட்டு இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா வாக்களித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என கடுமையாக சாடிய அவர், எனவே இந்த தேர்தலில் அந்த கட்சி விரட்டியடிக்கப்படும் என்று தெரிவித்தார். இதைப்போல காங்கிரசையும் குற்றம் சாட்டிய அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடியினருக்கு காங்கிரசும், பா.ஜனதாவும் ஒன்றுதான் எனக்கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து