தேசிய செய்திகள்

குஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

குஜராத்தில் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஜூனாகத்,

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்றில் 50-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து சவர்குண்ட்லாவிலிருந்து ஜுனகத் செல்லும் வழியில் திடீரெனெ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடங்குவார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து