தேசிய செய்திகள்

மராட்டியம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 600 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை